/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிப்பு; ஒழுங்குபடுத்திய நகரமைப்பு பிரிவினர்

ADDED : ஜூலை 29, 2025 09:06 PM

கோவை; காந்திபுரத்தில் நடைபா தை ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்திய நகரமைப்பு பிரிவினர், தொடர்ந்து விதிமீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என, வியாபாரிகளை எச்சரித்துள்ளனர்.
மாநகரில் டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில், நடைபாதைகளில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்களும் செல்கின்றன. இந்நிலையில், காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில் உள்ள நடைபாதையில் ஓரளவு ஆக்கிரமிப்பு செய்திருந்த பூக்கடை, துணிக்கடை உள்ளிட்டவற்றை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று ஒழுங்குபடுத்தினர்.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'அடையாள அட்டை வைத்திருந்த சாலையோர வியாபாரிகள் தவிர, மற்றவர்களை அப்புறப்படுத்துமாறு தெரிவித்துள்ளோம். இனி யும் விதிமீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளோம். மாலை, 5:30 மணி வரை, காந்திபுரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கடைகளை ஒழுங்குபடுத்தியுள்ளோம்' என் றனர்.