/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதையில் கடைகள்; ரோட்டோரத்தில் 'பார்க்கிங்'; போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள்
/
நடைபாதையில் கடைகள்; ரோட்டோரத்தில் 'பார்க்கிங்'; போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள்
நடைபாதையில் கடைகள்; ரோட்டோரத்தில் 'பார்க்கிங்'; போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள்
நடைபாதையில் கடைகள்; ரோட்டோரத்தில் 'பார்க்கிங்'; போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள்
ADDED : ஆக 17, 2025 10:02 PM

வால்பாறை; வால்பாறையில், ரோட்டோரத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ள நிலையில், வாகனங்களும் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.
வால்பாறையில், பிரதான ரோட்டின் ஓரத்தில், பாதசாரிகளுக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை ஆக்கிரமித்து, சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா தேசிய நகர் புறு வாழ்வாதார இயக்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கு 22 தள்ளுவண்டி கடைகள் வழங்கப்பட்டுள்ளன.
நடைபாதையையும், ரோட்டோரத்தில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் வாகனங்களும், கடைகளுக்கு வரும் வாகனங்களும் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், மக்கள் நடந்து செல்ல வழியில்லாததால், ரோட்டில் நடந்து செல்கின்றனர்.
போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டோரத்தில் விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும் நிலையில், தனி 'பார்க்கிங்' வசதி இல்லாததால், நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையில் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இந்நிலையில், ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதுடன், வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசலால், மக்களும் நிம்மதியிழந்துள்ளனர். மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
நகராட்சி சார்பில் படகுஇல்லம் அருகே கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்.
நடைபாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கி, பாதசாரிகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபாதையை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.