/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை; ஊராட்சிகளில் சுகாதார பணி பாதிப்பு
/
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை; ஊராட்சிகளில் சுகாதார பணி பாதிப்பு
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை; ஊராட்சிகளில் சுகாதார பணி பாதிப்பு
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை; ஊராட்சிகளில் சுகாதார பணி பாதிப்பு
ADDED : ஜன 18, 2024 12:12 AM
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில் பற்றாக்குறை நிலையில் இருக்கும் துாய்மைப்பணியாளர்கள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்திலுள்ள 38 ஊராட்சிகளில் நீண்ட காலமாக,துாய்மை பணியாளர்கள் நியமனத்தில் பற்றாக்குறை நிலையாக உள்ளது.
மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளின் கணக்கெடுப்புகளின் படி துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் இத்திட்டம் துவக்கப்பட்டபோது, இந்த மக்கள் தொகையை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால் பணியாளர்களின் எண்ணிக்கை அதற்கேற்ப இல்லை. இதனால், பல பகுதிகளில் சுகாதாரப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, நோய் பரவுதலுக்கான சூழலும் உருவாகிறது.
கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் குப்பைத்தொட்டிகளாகவும், ரோட்டோரங்கள் திறந்த வெளிக் குப்பைக்குளமாகவும் மாறியுள்ளன. சரியான விகிதத்தில் துாய்மைப்பணியாளர்கள் இல்லாததால், தற்போதுள்ளவர்களும் கூடுதல் பணி செய்ய வேண்டிய அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர். திடக்கழிவு மேலாண்மையில், மிக சில கிராமங்களில் மட்டுமே துாய்மையை காண முடிகிறது. பெரும்பான்மையான கிராமங்களில் குடியிருப்புகளிலிருந்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு, திறந்த வெளியிலும், நீர்நிலைகளின் அருகிலும் குவிக்கப்படுகின்றன.
அவர்களுக்கான தளவாடங்களும் முறையாக இல்லை. கிராமங்களின் சுகாதாரம் மட்டுமின்றி, திடக்கழிவு திட்டத்தின் முக்கியத்துவத்தையும் மேம்படுத்த, கூடுதல் துாய்மைப்பணியாளர்கள் நியமிக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.