/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணக்கு காட்டவா வெற்றி நிச்சயம் பயிற்சி
/
கணக்கு காட்டவா வெற்றி நிச்சயம் பயிற்சி
ADDED : நவ 18, 2025 04:24 AM
கோவை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும், நான் முதல்வன், வெற்றி நிச்சயம் திட்ட பயிற்சிகள், வெறுமனே கணக்கு காட்ட நடத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், விவசாயிகள், பெண் கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும், தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வனக்கல்லூரியுடன் இணைந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் 26 முதல் 28 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. சில பயிற்சிகளுக்கு ஊக்கத் தொகை உண்டு. இந்தப் பயிற்சிகள் பயனுள்ளவைதான். ஆனால், போதுமான அறிவிப்புகள் வெளியாகவில்லை, அவகாசம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் சிலர் கூறுகையில், ' திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க, இரண்டு மூன்று நாட்கள்தான் அவகாசம் இருந்தது. சில பயிற்சிகளுக்கு அதே நாளில் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. ஒரு வாரமாவது அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் குறைந்தது 10 நாட்களுக்கு முன், அறிவித்திருக்க வேண்டும். இனிமேலாவது கணக்கு காட்ட பயிற்சி வழங்காமல், போதிய அவகாசமும், விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்,' என்றார்.

