ADDED : ஜன 27, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்புலனாய்வு எஸ்.ஐ., கார்த்திகேய பாண்டியன் உள்ளிட்ட போலீசார் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டில், கடந்த, 24ம் தேதி இரவு சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பையுடன் நின்றிருந்த மூவரை போலீசார் சோதனை செய்தனர். ஆத்திரமடைந்த ஒருவர் கத்தியால் எஸ்.ஐ., கார்த்திகேய பாண்டியனை குத்தினார். காயமடைந்த எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகராறு செய்தவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆல்பின் தாமஸ், திருச்சூரை சேர்ந்த முகமத் சுவாலி, தக்ரூ என்பதும் தெரிந்தது. மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

