/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓராண்டாகியும் நிறைவுபெறாத சிக்கதாசம்பாளையம் குடிநீர் திட்டம்
/
ஓராண்டாகியும் நிறைவுபெறாத சிக்கதாசம்பாளையம் குடிநீர் திட்டம்
ஓராண்டாகியும் நிறைவுபெறாத சிக்கதாசம்பாளையம் குடிநீர் திட்டம்
ஓராண்டாகியும் நிறைவுபெறாத சிக்கதாசம்பாளையம் குடிநீர் திட்டம்
ADDED : ஜன 22, 2025 11:29 PM

மேட்டுப்பாளையம், ; சிக்கதாசம்பாளையம் ஊராட்சி புதிய குடிநீர் திட்டத்தை, விரைவாக நடைமுறை படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட, 17 ஊராட்சிகளில், மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில் அமைந்திருப்பது சிக்கதாசம்பாளையம் ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 7000 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூர் நீர் திட்டம், சூலூர், குத்தாரிபாளையம், கரட்டுமேடு ஆகிய நான்கு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, தினமும், 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீரை மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி வார்டுகளுக்கு பகிர்ந்து அளிக்கும் போது, ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பவானி ஆறு அருகே ஓடியும், போதிய குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து முன்னாள் ஊராட்சித் தலைவர் விமலா முயற்சியால் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளிபாளையம் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அதை கரட்டு மேட்டில் சுத்தம் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டப் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும், இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. தற்போது உள்ளாட்சி நிர்வாகம் தனி அலுவலரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. எனவே தனி அலுவலர், விரைவில் குடிநீர் திட்ட பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.