/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரியில் வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா கோவை மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
/
குமரியில் வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா கோவை மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
குமரியில் வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா கோவை மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
குமரியில் வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா கோவை மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
ADDED : டிச 23, 2024 04:11 AM
கோவை : கன்னியாகுமரியில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவி, 25ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில், மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி நடத்தப்படுகிறது.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
கன்னியாகுமரியில், 133 அடி உயர திருவுருவச் சிலையை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர், கலைஞர் நிறுவி, 25ம் ஆண்டு துவக்கவிழாவை, அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை, பொதுநூலக இயக்ககத்தின் சார்பில், அனைத்து மாவட்ட மைய நூலகத்திலும், திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறக்கப்பட்ட வெள்ளிவிழா டிச.,23(இன்று) முதல் 30 வரை கொண்டாட உள்ளது.
ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் சாலையில், செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தில், இந்நாட்களில் அய்யன் திருவள்ளுவர் தொடர்பான திருக்குறள் விளக்க புத்தக கண்காட்சி, கருத்தரங்கம், மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 'குழல் இனிது, யாழ் இனிது', 'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்', 'குமரியில் அய்யன் வள்ளுவர் சிலையும், குறளில் அதிகார வைப்பு முறையும்' என்ற தலைப்புகளில், பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
திருக்குறளில் ஏதேனும் 5 அதிகாரம் ஒப்புவிக்கலாம். திருக்குறள் தொடர்பான வினாடி வினாவிலும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பள்ளி அடையாள அட்டை நகலுடன் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள், 'நூலகர், மாவட்ட மைய நூலகம், 37/50, கவுலி பிரவுன் ரோடு, கோவை- 641002' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.