ADDED : நவ 16, 2026 08:58 PM

அ நிறம் | அளவு
சின்னதடாகம்: மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானை நடமாட்டத்தோடு, ஒற்றை யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
நேற்று (நவ.,15) இரவு சின்ன தடாகம் பகுதியிலுள்ள மலர்விழி என்பவர் உட்பட பலரது தோட்டத்தினுள் புகுந்த ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. ஒற்றை யானை நடமாட்டம் இப்பகுதியில் தொடர்வதால் விவசாயிகள் பீதி அடைந்தனர். யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
