ADDED : நவ 16, 2026 09:38 PM

அ நிறம் | அளவு
கோவை: கோவையில் இருந்து ஈரோட்டிற்கு நான்கு பேர் இன்று (நவ.,16) மாலை காரில் சென்று கொண்டிருந்தனர்.
கோல்டுவின்ஸ் அருகே புதிய மேம்பாலத்தில் கார் சென்ற போது திடீரென காரின் முன் பகுதியில் தீப்பிடித்தது. காரில் இருந்தவர்கள் அவசரமாக கீழே இறங்கினர். அவர்கள் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். முடியவில்லை. தகவல் அறிந்து பீளமேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
