/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சார்... தபால்! இரட்டை ஓட்டுரிமை உள்ள 2.25 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!
/
சார்... தபால்! இரட்டை ஓட்டுரிமை உள்ள 2.25 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!
சார்... தபால்! இரட்டை ஓட்டுரிமை உள்ள 2.25 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!
சார்... தபால்! இரட்டை ஓட்டுரிமை உள்ள 2.25 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!
ADDED : அக் 18, 2024 11:22 PM

கோவை: ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஓட்டுரிமை உள்ள வாக்காளர்களை, பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை, தேர்தல் ஆணையம் மீண்டும் துவக்கியுள்ளது. முதல்கட்ட நடவடிக்கையாக, கோவை மாவட்டத்தில், இரண்டு லட்சத்து, 25 ஆயிரத்து, 954 வாக்காளர்களுக்கு பதிவுத்தபால் அனுப்பப்படுகிறது.
நுாறு சதவீதம் தவறில்லாத, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வரும், 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவ., மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இச்சூழலில், ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் ஓட்டுரிமை இருந்தால், அவற்றை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வாக்காளர் விரும்பும் இடத்தில் மட்டும் ஓட்டுரிமை வழங்கி விட்டு, மற்ற இடங்களில் பட்டியலில் இருந்து பெயரை நீக்க, தேர்தல் பிரிவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வாக்காளர்களின் முகவரிக்கு, படிவம்-ஏ மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவை, பதிவுத்தபாலில் அனுப்பப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், 15 லட்சத்து, 39 ஆயிரத்து, 789 ஆண் வாக்காளர்கள், 16 லட்சத்து, 2 ஆயிரத்து, 278 பெண் வாக்காளர்கள், 646 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 31 லட்சத்து, 42 ஆயிரத்து, 713 வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், ஒவ்வொரு தேர்தலின் போது, ஐந்து லட்சம் முதல் ஏழு லட்சம் வாக்காளர்கள், ஓட்டுப்போட வருவதில்லை.
இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது, ஏராளமான வாக்காளர்களுக்கு, ஒரே தொகுதியில் இரண்டு இடங்களில் ஓட்டுரிமை, சில வாக்காளர்களுக்கு வெவ்வேறு தொகுதிகளில் ஓட்டுரிமை, இன்னும் சிலருக்கு வசிக்கும் ஊரிலும், சொந்த ஊரிலும் ஓட்டுரிமை இருப்பது தெரியவந்தது. அதனால், ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில், ஓட்டுரிமை இருப்பதை மென்பொருள் மூலமாக, தேர்தல் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
'டெமோகிராபிகலி சிமிலரி என்ட்ரீஸ்' (டி.எஸ்.இ.,) சிஸ்டம் முறையில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், ஓட்டுரிமை உள்ள வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், இரண்டு லட்சத்து, 25 ஆயிரத்து, 594 வாக்காளர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஓட்டுரிமை இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரே பெயர், தந்தை பெயர், முகவரி மற்றும் புகைப்படம் உள்ள வாக்காளர்களின் முகவரிக்கு, அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் இருந்து, பதிவுத்தபால் அனுப்பப்படுகிறது.
வாக்காளர் எந்த தொகுதியில் ஓட்டுப்போட விரும்புகிறார் என்பதை, படிவம்-'ஏ'ல் டிக் செய்து, அனுப்ப வேண்டும். வாக்காளரின் விருப்பத் தேர்வை விட்டு விட்டு, மற்ற இடங்களில் உள்ள பெயர்கள் நீக்கப்படும்.
சம்பந்தப்பட்ட முகவரிக்கு, தபால் சென்றடையாமல் திரும்பினாலோ அல்லது பதில் அனுப்பாமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், அம்முகவரிக்கு நேரில் சென்று விசாரித்து, நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு, தேர்தல் பிரிவினர் கூறினார்.
வாக்காளர் எந்த தொகுதியில் ஓட்டுப்போட விரும்புகிறார் என்பதை, படிவம்-'ஏ'ல் டிக் செய்து, அனுப்ப வேண்டும். வாக்காளரின் விருப்பத் தேர்வை விட்டு விட்டு, மற்ற இடங்களில் உள்ள பெயர்கள் நீக்கப்படும்.