/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி 43.49 அடியாக உயர்ந்தது; 4 வால்வுகளும் தண்ணீரில் மூழ்கின
/
சிறுவாணி 43.49 அடியாக உயர்ந்தது; 4 வால்வுகளும் தண்ணீரில் மூழ்கின
சிறுவாணி 43.49 அடியாக உயர்ந்தது; 4 வால்வுகளும் தண்ணீரில் மூழ்கின
சிறுவாணி 43.49 அடியாக உயர்ந்தது; 4 வால்வுகளும் தண்ணீரில் மூழ்கின
ADDED : அக் 16, 2024 10:57 PM
கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி விட்டது. நகர்ப்பகுதி மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளில் மழைப் பொழிவு காணப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 60 மி.மீ., அடிவாரத்தில் 14 மி.மீ., மழை பதிவானது. 9.94 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.
நீர் மட்டம், 43.49 அடியாக உயர்ந்திருக்கிறது. அதனால், கோவைக்கு தண்ணீர் எடுக்கும் நீர் புகு கிணற்றில் உள்ள, நான்கு வால்வுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு: பெரியநாயக்கன்பாளையம் - 10.60 மி.மீ., சின்கோனா - 13, சின்னக்கல்லார் - 23, வால்பாறை - 20, சோலையார் -19 மி.மீ., மழை பதிவானது. மற்ற இடங்களில் சாரல் மழையே பெய்திருந்தது.