/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட்; வென்றது இந்தியன் கிளப்
/
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட்; வென்றது இந்தியன் கிளப்
ADDED : ஏப் 09, 2025 10:44 PM
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆறாவது டிவிஷன் 'கே.வி.ராமச்சந்திரன் செட்டியார்' டிராபி போட்டி, ஆர்.வி.எஸ்., உள்ளிட்ட கல்லுாரி மைதானங்களில் நடந்து வருகிறது. நேற்று, இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், ஆரிஜின் ரீஜனல் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 254 ரன்கள் எடுத்தது. அணி வீரர்களான சந்துரு, 47 ரன்கள், ஆயர்தன், 48 ரன்கள், நீலகண்டன், 30 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர்.
எதிரணி வீரர் நவீன்குமார், மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய ஆரிஜின் அணியினர், 48 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 229 ரன்கள் எடுத்தனர்.
அணி வீரர்கள் ஹரிஹரன், 60 ரன்களும், ஸ்ரீதர், 35 ரன்களும், நவீன்குமார், 39 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் பரத் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.