/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி
/
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி
ADDED : ஆக 10, 2025 10:47 PM
கோவை,; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் ஆறாவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் அணியும், எம்.எம்., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
ஏ.எஸ்.பி., அணியினர், 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 202 ரன் எடுத்தனர்.
வீரர்கள் ஜீவா, 60 ரன்கள், மதன்குமார், 55 ரன்கள், திவாரக பிரசாத், 42 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சிவக்குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய எம்.எம்., கிரிக்கெட் கிளப் அணியினர், 48.2 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 205 ரன் எடுத்தனர்.
வீரர்கள் ஜான் பால்ராஜ், 47 ரன்னும், கணேஷ்குமார், 37 ரன்னும், ரமேஷ் சந்தர், 35 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.