/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : அக் 27, 2025 10:14 PM
கோவை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவை வேளாண் பல்கலை வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கு தோட்டக்கலை மற்றும் நிலத்தோற்ற வடிவமைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில், தோட்ட பராமரிப்பு மற்றும் நிலத்தை அழகுபடுத்துவதில் நேரடி பயிற்சி, தாவர பராமரிப்பு மற்றும் வடிவமைப்பு குறித்த நடைமுறை அமர்வுகள், நாற்றங்கால் நுட்பங்கள் மற்றும் புல்வெளி அமைப்பு பற்றிய வெளிப்பாடு, வேளாண் பல்கலை நிபுணர்களின் வழிகாட்டுதல், பயிற்சி சான்றிதழ், தொழில் துவங்க வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க அதிகபட்ச வயதுவரம்பு 35. வரும் 30ம் தேதி முதல் நவ., 28ம் வரை 26 நாட்களுக்கு, பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 0422 2969378 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

