/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தசோகை தடுக்க சிறுதானியம்; ஊட்டச்சத்து விழாவில் அறிவுரை
/
ரத்தசோகை தடுக்க சிறுதானியம்; ஊட்டச்சத்து விழாவில் அறிவுரை
ரத்தசோகை தடுக்க சிறுதானியம்; ஊட்டச்சத்து விழாவில் அறிவுரை
ரத்தசோகை தடுக்க சிறுதானியம்; ஊட்டச்சத்து விழாவில் அறிவுரை
ADDED : அக் 04, 2024 10:15 PM
அன்னுார் : 'ரத்த சோகையை தடுக்க, சிறு தானியம் அதிகமாக உட்கொள்ள வேண்டும்' என, ஊட்டச்சத்து விழாவில் தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அன்னூர் ஒன்றியத்தில், அங்கன்வாடி மையங்களில், ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
அன்னுார் அங்கன்வாடி மையத்தில் விழா நடந்தது. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேசுகையில், 'இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள், பெற்றோர், வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், ஆகியோர் ரத்த சோகையை தவிர்க்க சிறுதானியங்கள் உட்கொள்ள வேண்டும். கீரையை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள், வட்டார மருத்துவ அலுவலர், அங்கன்வாடி மையப் பணியாளர்கள் பங்கேற்று, ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.