/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்ன வெங்காயம் அறுவடை; விவசாயிகள் 'அப்செட்'
/
சின்ன வெங்காயம் அறுவடை; விவசாயிகள் 'அப்செட்'
ADDED : ஆக 29, 2025 12:49 AM

கோவை; கோவையில், மாதம்பட்டி, தீத்திப்பாளையம், நரசிபுரம், முட்டத்துவயல் உட்பட சுற்றுவட்டாரங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வெயில் சற்று அதிகமாக இருந்ததால், அறுவடை பணியை விவசாயிகள் துவக்கினர். சில நாட்களாக, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால், கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை பட்டறையில் இருப்பு வைக்கும் பணி, பெரும்பாலான பகுதிகளில் நடந்து வருகிறது. இதுபோன்ற நிலையில், செப்., 2வரை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல், சில நாட்களாக மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. பட்டறையில் இருப்பு வைக்கும்போது, போதிய காற்றோட்டம் இல்லாத பட்சத்தில், அழுகல் ஏற்பட வாய்ப்புள்ளது' என்றனர்.

