/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய அளவிலான சதுரங்க போட்டி துவக்கம்
/
குறுமைய அளவிலான சதுரங்க போட்டி துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 09:44 PM

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையத்தில் குறு மைய அளவிலான சதுரங்க போட்டியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேட்டுப்பாளையம் குறு மைய அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கியது.
இதனை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஜெயராமன் துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜோதிமணி முன்னிலை வகித்தார்.
மேட்டுப்பாளையம் குரு மைய அளவில் இருந்து, சுமார் 45 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் பங்கேற்றனர்.
இப்போட்டியில் 11, 14, 17, 19 வயதுடைய மாணவ, மாணவிகள் இடையே போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.