/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்மைலிங் பாரத்' விழிப்புணர்வு பேரணி
/
'ஸ்மைலிங் பாரத்' விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 25, 2025 11:28 PM

கோவை; இந்திய ஆர்த்தோடோன்டிக் சங்கம் சார்பில், தேசிய அளவிலான 'ஸ்மைலிங் பாரத் 2.0' என்ற திட்டம் துவங்கப்படுகிறது.
இதன் துவக்கமாக, ஆர்.வி.எஸ்., பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லுாரி சார்பில், பற்கள் சீரமைப்பு மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்திய பல் சீரமைப்புத் துறை சங்கத்தின் பிரதிநிதி விஜய் ஆதித், கிஷோர் டெண்டிஸ்ட்ரி மருத்துவமனை நிறுவனர் கிஷோர்குமார், மூத்த பல் சீரமைப்பு நிபுணர் சாமி ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஆர்.வி.எஸ்., பல் மருத்துவக் கல்லுாரியின் முதல்வர் டாக்டர் விஜய், பல் சீரமைப்புத் துறை தலைவர் ராஜசேகரன், ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லுாரியின் முதல்வர் தீபானந்தன், பேராசிரியர் ஆப்ரோஸ் கண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.