ADDED : டிச 15, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் வட்டாரத்தில் உள்ள, நீலம்பூர் சின்னியம்பாளையம், கருமத்தம்பட்டி, சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் சிவாலயங்கள், அம்மன் கோவில்களில், நேற்று முன்தினம் கார்த்திகை ஜோதி ஏற்றி வழிபாடு நடந்தது.
கணபதீஸ்வரர் கோவிலில் சுவாமி, அம்மனுக்கு பவுர்ணமி அபிஷேக முடிந்து, ஜோதி ஏற்றப்பட்டது.
சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள திருவேங்கட நாத பெருமாள் கோவிலில் தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றியபின், இறைவனை அக்னி ரூபத்தில் வழிபடும் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடந்தது. இதில், கோவில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.