/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்றிய அலுவலகத்தில் சோலார் பேனல் சீரமைப்பு
/
ஒன்றிய அலுவலகத்தில் சோலார் பேனல் சீரமைப்பு
ADDED : நவ 13, 2025 08:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், சோலார் பேனல் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, 5 ஆயிரம் வாட் அளவில் மின்சாரம் உற்பத்தி இருந்தது.
அதன்பின், இந்த சோலார் பேனலில் ஏற்பட்ட பழுது மற்றும் நிர்வாக காரணங்களால் சீரமைக்கப்படாமல் இருந்தது. தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன் அறிவுறுத்தல் படி, இந்த சோலார் பேனல்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய அலுவலகத்திற்கு, 90 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணம் முன்பு செலுத்தப்பட்டது. இனி வரும் காலங்களில், இந்த தொகையானது கணிசமாக குறையும் என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

