ADDED : செப் 14, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்படும், பிரதம மந்திரி சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ், சோலார் மின் இணைப்பு குறித்த சிறப்புமுகாம், பீளமேடு பகுதியில் நாளை (செப்.16ம் தேதி) நடக்கிறது.
பீளமேடு, தண்ணீர் பந்தல், கொடிசியா ரோட்டில் உள்ள, நிவாசன் உதயனா பில்டிங்கில், நாளை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் முகாமில், சோலார் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள், மின் வாரிய அதிகாரிகள் மின் நுகர்வோருக்கு, சோலார் மின் இணைப்பு குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.
இத்தகவலை, நகரியம் செயற்பொறியாளர், பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.