/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூரிய மின்சக்தி திட்டம்: இன்று விழிப்புணர்வு முகாம்
/
சூரிய மின்சக்தி திட்டம்: இன்று விழிப்புணர்வு முகாம்
சூரிய மின்சக்தி திட்டம்: இன்று விழிப்புணர்வு முகாம்
சூரிய மின்சக்தி திட்டம்: இன்று விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 21, 2025 09:30 PM
கோவை; கோவை மின் பகிர்மான வட்டம், குனியமுத்துார் கோட்டத்துக்கு உட்பட்ட பிரிவு அலுவலகங்கள் வாயிலாக அந்தந்த பகுதிகளில், பிரதம மந்திரி சூரிய மின்சக்தி திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
கோவை ஆத்துப்பாலம் மற்றும் குனியமுத்துார் பகுதிகளுக்கு, குனியமுத்துார் ஆயிஷா மஹாலிலும், குறிச்சி ஹவுசிங் யூனிட் மற்றும் ஈச்சனாரி பகுதிகளுக்கு ஈச்சனாரி தங்கம் மஹாலிலும் முகாம் நடைபெறும்.
இதேபோல், மதுக்கரை நகராட்சி பகுதிகளுக்கு குரும்பபாளையம், மகாலட்சுமி திருமண மண்டபத்திலும், வெள்ளலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, வெள்ளலுார் செந்துார் மஹாலிலும் முகாம் நடக்கிறது.
இன்று (22ம் தேதி) காலை, 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை நடைபெறும் என, குனியமுத்துார் மின்வாரிய செயற்பொறியாளர் சென்ராம் தெரிவித்துள்ளார்.