/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலையில் பாய் நாற்றாங்கால் விதைப்பு; வேளாண் உதவி இயக்குனர் தகவல்
/
ஆனைமலையில் பாய் நாற்றாங்கால் விதைப்பு; வேளாண் உதவி இயக்குனர் தகவல்
ஆனைமலையில் பாய் நாற்றாங்கால் விதைப்பு; வேளாண் உதவி இயக்குனர் தகவல்
ஆனைமலையில் பாய் நாற்றாங்கால் விதைப்பு; வேளாண் உதவி இயக்குனர் தகவல்
ADDED : ஜூன் 24, 2025 10:04 PM

ஆனைமலை; ஆனைமலையில், பாய் நாற்றங்கால் விதைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஜூலை முதல் வாரத்தில் இயந்திர நடவு மேற்கொள்ளப்படும்,' என ஆனைமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, பாய் நாற்ங்கால் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது: ஆனைமலை வடக்கலுார் அம்மன் கோவில் வயல் பகுதியில் பாய் நாற்றங்கால் விதைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஜூலை முதல் வாரத்தில் இயந்திர நடவு பணி மேற்கொள்ளப்படும்.இம்முறையில் நடவு மேற்கொள்வதால், விதை அளவு குறைகிறது. நாற்றுகளுக்கு இடையே, சீரான இடைவெளி விடுவதால் மணிகள் நிறைந்த துார்கள் அதிகளவில் வளரும். நடவு செய்து, 30 நாட்களுக்கு பின், 15 நாட்களுக்கு ஒரு முறை காய்ச்சலும், பாய்ச்சலுமாக என்ற அடிப்படையில், நீர் பாசனம் செய்தால் போதுமானதாகும். ஜீவாமிர்தம், அசோலா போன்ற இயற்கை உயிர் இடுபொருட்கள் பயன்பாடு நெல் உற்பத்தி திறனை அதிகரிக்கும்.
மாநில குறுவை தொகுப்பு திட்டம் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் நெல் சாகுபடியாளர்களை ஊக்குவிக்கவும், முதன்மை சுத்திரிப்பு மையங்கள் வாயிலாக சன்னரக நெல் ரகங்களான, 'கோ 51', மற்றும் 'கோ 55' ஆகியவை முதன்மை படுத்தி கொள்முதல் செய்யும் நோக்கில், 2025 -26ம் ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நெற்பயிருக்கான நுண்ணுாட்டச்சத்து ஏக்கருக்கு, ஐந்து கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம் திரவ உயிர் உரம், ஒரு லிட்டர், 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் விதை கிராம திட்டங்களில், 'கோ 51' மற்றும் 'கோ 55' ரக சான்று விதைகள் மானிய விலையில் வினியோகம் செய்ய, ஐந்து டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை, இரண்டு டன்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு ஆனைமலை மற்றும் கோட்டூர் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.
இவ்வாறு, கூறினார்.