/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் உதவி செயலியை பயன்படுத்த எஸ்.பி., வேண்டுகோள்
/
போலீஸ் உதவி செயலியை பயன்படுத்த எஸ்.பி., வேண்டுகோள்
போலீஸ் உதவி செயலியை பயன்படுத்த எஸ்.பி., வேண்டுகோள்
போலீஸ் உதவி செயலியை பயன்படுத்த எஸ்.பி., வேண்டுகோள்
ADDED : ஆக 03, 2025 09:16 PM
கோவில்பாளையம்; கோவில்பாளையத்தில் ரோந்து பணி சரியாக நடக்கிறதா, என கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., ஆய்வு செய்தார்.
கோவை புறநகரில் குற்றச் செயல்களை தடுக்கவும், சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யவும், சாலைப்போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக ரோந்து செல்லும் 'ஸ்மார்ட் காக்கி' என்ற திட்டத்தை கோவை ரூரல் போலீஸ் உருவாக்கியுள்ளது.
கோவில்பாளையம் அருகே தேவம்பாளையத்தில் நேற்று முன்தினம் எஸ்.பி., கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரோந்து காவலர்கள் சரியாக ரோந்து செல்கின்றனரா, குற்ற செயல் தடுப்பில் ஈடுபடுகின்றனரா, என ஆய்வு செய்தார். அப்பகுதி பொதுமக்களிடம் காவல் உதவி செயலியை பயன்படுத்தும் படியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் தெரிவித்தார். ஆய்வில் எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.