/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி பலகாரங்களில் வேண்டும் தனிகவனம்
/
தீபாவளி பலகாரங்களில் வேண்டும் தனிகவனம்
ADDED : அக் 10, 2025 10:37 PM
தீ பாவளி என்றாலே பலகாரங்கள்தான். வீடு முழுவதும் இனிப்புகளும், காரங்களும் நிறைந்திருக்கும் போது டயட் கட்டுப்பாடுகளுக்கெல்லாம் இடமில்லை. இருப்பினும், உங்கள் உணவுகளை கவனமாக தேர்ந்தெடுப்பதன் வாயிலாக தீபாவளியை ஆரோக்கியமாக கொண்டாடலாம். கொழுப்புகளற்ற, குறைந்த கலோரி, ஊட்டச்சத்து உணவுகளால் தீபாவளி பண்டிகை சுவையை குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
n வெள்ளை சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளுக்கு பதிலாக, பனங்கருப்பட்டி, பனை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் என இயற்கை மற்றும் ஆரோக்கியமான இனிப்புகளை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளை தேர்ந்தெடுக்கவும். வீட்டில் பலகாரங்களை தயாரிப்பதாக இருந்தால், தேன் மற்றும் பழங்களையும் இனிப்பு சுவைக்காக பயன்படுத்தலாம்.
n பல தீபாவளி இனிப்புகளில் ரவா அல்லது மைதா பயன்படுத்தப்படுகிறது. அவைகளுக்கு மாற்றாக கோதுமை மாவு, கடலை மாவு அல்லது பருப்பு மாவு ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த வகை மாவுகளை அதிக நார்ச்சத்து மற்றும் புரதத்தை அளிக்கின்றன.
n எண்ணெய் பதார்த்தங்கள், வறுத்த உணவுகள் மற்றும் அதிகப்படியான கொழுப்பு உள்ள சிற்றுண்டிகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றலாம். வறுத்த சிற்றுண்டிகளுக்குப் பதிலாக, வேகவைத்த வகைகளை சாப்பிடலாம்.
n இனிப்புகளை பயன்படுத்துவதற்கு முற்றிலும் நெய், வனஸ்பதியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெய் இல்லா பால் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய், பீனட் பட்டர் பயன்படுத்தலாம். முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும் குறைந்தளவு நெய்யை பயன்படுத்தலாம்.
n முந்திரி, பாதம், வால்நட் போன்ற பருப்புகள், பூசணி, சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை உங்கள் இனிப்புகள் தயாரிப்புகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். பேரிச்சை, உலர் திராட்சை, அத்தி போன்ற உலர் பழங்களையும்,பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம்.
n கம்பு, வரகு, சாமை, தினை, போன்ற சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. வரகு முந்திரி பர்பி, சிறுதானிய லட்டு, வரகு பூந்தி லட்டு, நவதானிய பர்பி என எக்கச்சக்க சிறுதானிய ஸ்வீட் வெரைட்டிகள் தற்போது கிடைக்கிறது.
n மைதாவை ஒப்பிடும் போது பால் அடிப்படை இனிப்புகள் குறைந்த கலோரியை கொண்டது. மேலும், பாலில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் நுண்ணுாட்டச்சத்துகள் இருக்கிறது. கீர், ரப்ரி, பால்கோவா, ரசமலாய் போன்ற என பால் அடிப்படை ஸ்வீட்டுகளை தேர்ந்தெடுக்கவும்.