/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
/
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
ADDED : மே 10, 2025 02:40 AM
பொள்ளாச்சி: சித்ரா பவுர்ணமியையொட்டி, பொள்ளாச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு, 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, வெளியூர் மற்றும் கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன. முக்கிய பண்டிகை நாட்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு பொள்ளாச்சியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த மாதம், நாளை (11ம் தேதி) இரவு, 8:47 மணி முதல், 12ம் தேதி இரவு, 10:00 மணி வரை சித்ரா பவுர்ணமி உள்ளது.
இதையடுத்து, பக்தர்கள் வசதிக்காக நாளை மதியம், 2:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை தொடர்ந்து, 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வரும், 12ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து மாலை பஸ்கள் புறப்பட்டு, 13ம் தேதி அதிகாலை பொள்ளாச்சிக்கு வரும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.