/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்
ADDED : நவ 27, 2025 01:46 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவர் சான்றிதழ் வழங்குதல், இலவச ரயில் மற்றும் பஸ் பயண சலுகைகள், உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கான பதிவு உள்ளிட்டவைகள் செய்து தரப்படுகிறது.
மேலும், குழந்தைகள் நலம், மன நலம், காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

