ADDED : ஏப் 03, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாாச்சி; பொள்ளாச்சி கோட்ட அளவில், மின் நுகர்வோர் குறைகேட்பு சிறப்பு முகாம், நாளை (5ம் தேதி) நடக்கிறது. பொள்ளாச்சி கோட்ட அலுவலக வளாகத்தில், காலை, 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில், பில்லிங், மீட்டர் பழுது, குறைந்த மின்னழுத்தம், மின் கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட மின் சார்ந்த புகார்களை தெரிவித்து, பிரச்னைக்கு தீர்வு காணலாம், என, செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
* நெகமம் கோட்ட அளவில், மின் நுகர்வோர் குறைகேட்பு சிறப்பு முகாம், நாளை நடக்கிறது. நெகமம் அலுவலக வளாகத்தில் காலை, 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில், புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம், என, செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

