/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு முகாம்
/
முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு முகாம்
முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு முகாம்
முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு முகாம்
ADDED : மார் 18, 2024 01:00 AM

தொண்டாமுத்தூர்:பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு, சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது.
வாக்காளர் பட்டியலில், திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில், பேரூர் தாலுகாவிற்குட்பட்ட ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் உள்ள, முதியோர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யும் வகையில், ஆதரவற்ற இல்லங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இதில், பேரூர் தாசில்தார் ஜோதிபாசு நேரில் சென்று, முதியோர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம் மேற்கொள்ளவும் விண்ணப்பங்களை வழங்கினார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் பி.எல்.ஓ.,க் கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.