/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கரை அளவு, பல்ஸ், ரத்த அழுத்தம் பரிசோதிக்க சிறப்பு மையம் துவக்கம்

ADDED : ஜூலை 22, 2025 10:58 PM

கோவை; கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அத்தியாவசிய அடிப்படை பரிசோதனை மையம், வரும் 25ம் தேதி பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
பொதுவாக, தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகள் மருத்துவரை பார்க்கும் முன், அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்டு, புறநோயாளிகள் பிரிவுக்கு மருத்துவர்களை பார்க்க அனுப்பப்படுவார்கள்.
அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் பிரச்னைக்கு ஏற்றவாறு, புறநோயாளிகள் பிரிவை நேரடியாக அணுகி வருகின்றனர்.
ஒவ்வொரு துறையிலும், அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படும் வசதிகள் இருந்தாலும், தற்போது ஒருங்கிணைந்த மையமாக, அரசு மருத்துவமனைகளில் புதிய மையம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இம்மையம், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, சர்க்கரை, பல்ஸ், ரத்த அழுத்தம், உயரம், எடை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நோயாளிகள் அந்தந்த துறைக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இதுகுறித்து, டீன் நிர்மலாவிடம் கேட்ட போது, ''நோயாளிகள், உடன் வருபவர்கள் சர்க்கரை, பல்ஸ் போன்ற அடிப்படை பரிசோதனைகள் செய்துகொள்ள ஏதுவாக, இம்மையம் அமையவுள்ளது. வரும் 25ம் தேதி மையத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.