/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறு தினத்தன்று சிறப்பு வகுப்பு
/
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறு தினத்தன்று சிறப்பு வகுப்பு
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறு தினத்தன்று சிறப்பு வகுப்பு
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறு தினத்தன்று சிறப்பு வகுப்பு
ADDED : மார் 30, 2025 10:48 PM
பொள்ளாச்சி; தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்யும் வகையில், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன், ஞாயிறு தினத்தன்று, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், ஞாயிறு தினத்தன்று, அந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அன்றைய தினம், அடுத்து தேர்வு எழுதவுள்ள பாடத்தை தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வு கடந்த, 28ம் தேதி துவங்கிய நிலையில், ஏப்., 15ம் தேதி வரை, குறிப்பிட்ட நாள் இடைவெளியில் நடத்தப்படுகிறது.
இதனால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன், ஞாயிறு தினத்தன்றும் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
குறிப்பாக, பொதுத்தேர்வுக்கு ஏற்றாற்போல், பள்ளி அளவில் தேர்வு நடத்தியும், அதன் வாயிலாக பின்தங்கிய மாணவர்களுக்கு, தீவிர பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அப்போது, அந்தந்த பாட ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்படுவார்.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்பு பெரிதும் பயன்படும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு முழுமையாக பயற்சி அளிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.