/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஐ.டி.யில் சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
கே.ஐ.டி.யில் சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : அக் 16, 2025 08:55 PM

கோவை: பிளஸ் 2 எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சூலுார், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி தலைவர் பொங்கலுார் பழனிசாமி தலைமை வகித்தார்.
கல்வி ஆலோசகர் அஷ்வின் பேசியதாவது:
சர்வதேச அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்ப துறைகளான, எலக்ட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரங்கள் குறித்த தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் மாணவ, மாணவியர் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பிளஸ் 2வுக்குப்பின் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர்வதற்கான பல்வேறு நுழைவு தேர்வுகள் உள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெற மாணவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
சென்னை பெரும்பாக்கம் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி, 'தேர்வை வெல்லும் ரகசியங்கள்' என்ற தலைப்பில் பேசினார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 2,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கல்லுாரி துணைத்தலைவர் இந்து முருகேசன், தலைமை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லுாரி முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.