/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராணுவ வீரர்களுக்காக கோவிலில் சிறப்பு பூஜை
/
ராணுவ வீரர்களுக்காக கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : மே 13, 2025 10:13 PM
பெ.நா.பாளையம்:
நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் இந்திய ராணுவ வீரர்களுக்காக சிறப்பு பூஜை நடந்தது.
இந்திய - பாகிஸ்தான் போரில் முழு திறமையுடன் செயல்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உள்ளிட்ட எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ, அ.தி.மு.க., சார்பில் நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் கூறுகையில் ''முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. ராணுவ வீரர்களுக்காகவும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன,'' என்றார்.