/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சிறப்பு பூஜை
/
சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 16, 2025 09:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சிறப்பு பூஜை, ஹோமம் நடத்தினர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. கோவிலின் முன் பகுதியில் கதிர் நாயக்கன்பாளையம், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெளிப்புற பயிற்சிக்காக, கடந்த சில நாட்களாக தங்கி பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவையொட்டி பாலமலை ரங்கநாதர் கோவிலில் ஹோமம், பஜனை, சிறப்பு பூஜை ஆகியன நடத்தி, தங்களுடைய பயிற்சிகளை நிறைவு செய்தனர். இதில், திரளான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கலந்து கொண்டனர்.