/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவில்களில் கூடார வல்லி சிறப்பு பூஜை
/
பெருமாள் கோவில்களில் கூடார வல்லி சிறப்பு பூஜை
ADDED : ஜன 12, 2025 11:07 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கூடார வல்லி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கூடாரவல்லி சிறப்பு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆண்டாள் அலங்காரத்தில் தாயார், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், தனுார் மாத கூடாரவல்லியையொட்டி ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி ரங்கமன்னார் பல்லக்கு சேவை, கடை வீதி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை, 10:35 மணிக்கு ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.