/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 15ம் தேதி காசி தமிழ் சங்கமம் கோவை - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்

ADDED : பிப் 05, 2025 11:05 PM
கோவை: காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, கோவை - பனாரஸ் இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் பதிப்பு வரும், 15ம் தேதி துவங்குகிறது. உத்திரபிரதேசத்தின் வாரணாசியில், 10 நாட்கள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு கோவை - பனாரஸ் இடையே சிறப்பு ரயிலை இயக்குவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை - பனாரஸ்(06187) சிறப்பு ரயில், கோவையிலிருந்து வரும், 16 ம் தேதி காலை 6:35 மணிக்கு புறப்பட்டு, 18 ம் தேதி காலை 7:15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். அதேபோல், பனாரஸ் - கோவை(06188) சிறப்பு ரயில் பனாரஸில் இருந்து 22 ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு புறப்பட்டு, 24ம் தேதி காலை 9:30 மணிக்கு கோவை வந்தடையும்.
ஏ.சி., மூன்றடுக்கு, மூன்றடுக்கு(எகானமி), படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நின்று செல்லும்.