ADDED : மே 10, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பெங்களூரு- திருவனந்தபுரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலானது, பெங்களூருவில் இருந்து வெள்ளிதோறும் புறப்படும் சேவை (எண்:06555), வரும் செப்., 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிறுதோறும் புறப்படும் சேவை (எண்: 06556, வரும் செப்., 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரு மார்க்கங்களிலும் தலா, 17 புறப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

