/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எர்ணாகுளம் - பாட்னாவுக்கு சிறப்பு ரயில்
/
எர்ணாகுளம் - பாட்னாவுக்கு சிறப்பு ரயில்
ADDED : ஜூலை 20, 2025 01:28 AM
கோவை : கோவை, திருப்பூர் வழியாக எர்ணாகுளம் - பாட்னாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, எர்ணாகுளம் - பாட்னா(06085) வாராந்திர ரயில், வரும், 25 முதல், ஆக., 15ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமை மாலை 3:30 மணிக்கு பாட்னா சென்றடையும்.பாட்னா - எர்ணாகுளம்(06086) வாராந்திர ரயில், வரும், 28 முதல், ஆக., 18ம் தேதி வரை திங்கள்கிழமைகளில் பாட்னாவில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்.இந்த ரயில்களில், ஏ.சி., இரண்டு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பொது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடுர், நெல்லுார், விஜயவாடா, ராஜமுந்திரி, ஸ்ரீகாக்குளம் ரோடு, பாலாசூர் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.எர்ணாகுளம் - பாட்னா(06085) ரயில், கோவைக்கு சனிக்கிழமைகளில் மாலை 3:25 மணிக்கு வரும். பாட்னா - எர்ணாகுளம்(06086) ரயில், கோவைக்கு புதன் கிழமைகளில் இரவு 10:00 மணிக்கு வரும்.