/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினருக்கான சிறப்பு பயிற்சி மையம்
/
பழங்குடியினருக்கான சிறப்பு பயிற்சி மையம்
ADDED : ஜூலை 09, 2025 10:21 PM
பெ.நா.பாளையம்; கோவை மாவட்ட வேலை மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், பழங்குடியினர், போட்டி தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி வகுப்புகள் வெள்ளியங்காட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தினர் கூறுகையில்,' ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி வகுப்பு மற்றும் வழிகாட்டும் நிலையம் சார்பில், பழங்குடியினருக்கான டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி மையம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு சமுதாய கூடத்தில் பிரதிவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.
இதில் டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இதில், பழங்குடியினர் மட்டுமல்லாது, பிற வகுப்பினரும் கலந்து கொள்ளலாம். வகுப்புகளில் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அனுபவம் மிக்க ஆசிரியர்கள், இலவச பாட குறிப்புகள், மாதந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையத்தை, 94990 55939 என்ற எண்ணில் அணுகலாம்' என்றனர்.