/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு
/
மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு
ADDED : செப் 23, 2024 12:11 AM

அன்னுார் : கடந்த சில மாதங்களாக, அன்னூர் வட்டாரத்தில், போதுமான மழை பெய்யவில்லை. விவசாய பயிர்கள் கருகுகின்றன. வழக்கமாக ஆவணி மாதமே மழை பெய்ய துவங்கும். தற்போது புரட்டாசி பிறந்தும் மழை பெய்யவில்லை.
இதையடுத்து நல்லி செட்டிபாளையத்தில், நேரு மகளிர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மழை சோறு சாப்பிடும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.
அலங்கரிக்கப்பட்ட சிறுமியர் விநாயகர் சிலைகளை ஏந்தியபடி வீடு வீடாக சென்று அன்னத்தை பெற்றனர்.
ஊர்வலமாக செல்வ விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கு அன்னத்தை விநாயகருக்கு படைத்து அதன் பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செல்வ விநாயகருக்கு மழை வேண்டி அபிஷேக பூஜை, அலங்கார பூஜை செய்யப்பட்டது. நல்லிசெட்டிபாளையம் கிராம மக்கள் பங்கேற்று மழை வேண்டி விநாயகரை வழிபட்டனர்.