/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிக்கிருத்திகை விழா சிறப்பு வழிபாடு; முருகன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்

ADDED : ஜூலை 20, 2025 11:32 PM

கோவை; ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஆடிக்கிருத்திகை நாளில் கொண்டாடப்படும் முக்கிய விழா. இது முருகப்பெருமானுக்கு உகந்த நாள். கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் கிருத்திகை வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது முருகனுக்கு உகந்த மாதமாக இருப்பதால், முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், மற்றும் வழிபாடுகள் நடந்தன.பக்தர்கள் பிரார்த்தனை களையும், நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.
சுக்கிரவார் பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மயில் காவடி உள்ளிட்ட, பல வகையான காவடிகளை சுமந்து வந்தும், பால்குடங்களை சுமந்தும், நேர்த்திக் கடன் செலுத்தினர். கோனியம்மன், தண்டு மாரியம்மன், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில்களில் உள்ள முருகன் சன்னிதிகளில், நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திரளான பக்தர்கள் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசித்தனர்.