/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோய் இல்லாமல் வாழ வேண்டும் தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
/
நோய் இல்லாமல் வாழ வேண்டும் தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
நோய் இல்லாமல் வாழ வேண்டும் தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
நோய் இல்லாமல் வாழ வேண்டும் தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
ADDED : ஏப் 23, 2025 10:55 PM
கோவில்பாளையம்;கவையன்புத்தூர் தமிழ் சங்கத்தின் 71 வது அமர்வு, பாராட்டு விழா மற்றும் புத்தக அறிமுக விழா, கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது. பணி நிறைவு தலைமை ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார்.
டாக்டர் தீபா கந்தசாமி தலைமை வகித்து பேசுகையில், இன்றைய வாழ்வியல் மாற்றத்தால், வரலாறு காணாத நோய்கள் வந்து வாட்டுகின்றன. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான வாழ்க்கை சிறியது. அதை நோய் நொடியின்றி வாழ்ந்து, வரலாறு படைக்க வேண்டும் என்றால், உணவே மருந்து என்ற நெறியில் வாழ்வதே சிறப்பு என்றார்.
கவிஞர் சண்முக தேவி எழுதிய, 'பாரதி வரியும், பாவையர் வாழ்வும்,' என்னும் புத்தகத்தை விஜயலட்சுமி அறிமுகப்படுத்தி பேசினார்.
கவிஞர் கவியுழவன் பேசுகையில், பிறரை துன்புறுத்தி அழ வைத்து சம்பாதிக்கிற பொருள் எல்லாம் தன்னை விட்டுப் போகும்போது தன்னையும் அழ வைத்துவிட்டு தான் போகும், என்றார்.