/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி அருகே வேகத்தடை ஆசிரியர்கள், மாணவர்கள் நிம்மதி
/
பள்ளி அருகே வேகத்தடை ஆசிரியர்கள், மாணவர்கள் நிம்மதி
பள்ளி அருகே வேகத்தடை ஆசிரியர்கள், மாணவர்கள் நிம்மதி
பள்ளி அருகே வேகத்தடை ஆசிரியர்கள், மாணவர்கள் நிம்மதி
ADDED : பிப் 22, 2024 09:07 PM

பொள்ளாச்சி;தொப்பம்பட்டி பள்ளி அருகே, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, தொப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளி அருகே, நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் வேகத்தடை இல்லாததால், மாணவர்கள் ரோட்டை கடக்கும் போது மிகுந்த சிரமப்பட்டனர். அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது.
இது குறித்து, பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி அருகே இரண்டு இடங்களில் வெள்ளை பட்டையிலான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளியின் அருகே இருபுறமும், 2.5 செ.மீ., உயரத்தில் ஆறு வெள்ளை பட்டைகள் அமைத்து வேகத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த முடியும். மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.