/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி; வாலிபால், த்ரோ பாலில் வீரர்கள் 'சுறுசுறுப்பு'

ADDED : ஜூலை 10, 2025 10:12 PM

கோவை; மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில், 28 அணிகள் பங்கேற்றுள்ளன.
பி.பி.ஜி., குழும நிறுவனத்தில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நேற்றும், இன்றும் நடக்கிறது. இதில், வாலிபால் போட்டியில், 13 அணிகளும், த்ரோ பால் போட்டியில், 15 அணிகளும் பங்கேற்றுள்ளன.
'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. வாலிபால் முதல் போட்டியில், விவேகம் அணி, 25-12, 25-15 என்ற புள்ளிகளில் ஸ்ரீ சக்தி அணியையும், கிக்கானி அணி, 25-22, 25-19 என்ற புள்ளிகளில் கீதாஞ்சலி அணியையும், பெர்க்ஸ் அணி, 25-14, 25-12 என்ற புள்ளிகளில் கிக்கானி அணியையும் வென்றன.
த்ரோபால் போட்டியில், பத்மாவதி அம்மாள் அணி, 15-3, 6-15, 15-7 என்ற புள்ளிகளில் ஜி.ஆர்.டி., பப்ளிக் பள்ளி அணியையும், ஹனி பன்ச் அணி, 15-2, 15-3 என்ற புள்ளிகளில் புனித ஜோசப் அணியையும், ஸ்ரீ சக்தி அணி, 16-14, 15-10 என்ற புள்ளிகளில் கோவை பப்ளிக் அணியையும் வென்றன.
அதேபோல், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் அணி, 15-2, 15-7 என்ற புள்ளிகளில் அல்கமி அணியையும், ஜி.ஆர்.டி., மெட்ரிக் அணி, 15-7, 12-15, 15-11 என்ற புள்ளிகளில் கிக்கானி பள்ளி அணியையும், கீர்த்திமான் அணி, 15-2, 15-2 என்ற புள்ளிகளில் கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி அணியையும் வென்றன. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.