/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு தின விழா; போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
/
விளையாட்டு தின விழா; போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
விளையாட்டு தின விழா; போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
விளையாட்டு தின விழா; போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : மே 11, 2025 11:52 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, என்.பி.டி., மற்றும் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த விளையாட்டு தின விழாவில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி, என்.பி.டி., மற்றும் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், விளையாட்டு தின விழா நடந்தது. என்.பி.டி., கல்லுாரி, விளையாட்டு பிரிவு மாணவ இணைச்செயலாளர் ஸ்வஸ்திகா, வரவேற்றார்.
உடற்கல்வி இயக்குனர் தேவராஜன், துணை உடற்கல்வி இயக்குனர் நாச்சிமுத்து ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். கோவை பயனீர் டிரஸ்ட் கருவூலம் நிர்வாகம் அப்ராணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாணவர்கள் அபிசேக், முகேஷ், ஸ்ரீஹரி, சுவின்குமார் ஆகியோர் விளையாட்டுக்கான சிறந்த 'அவுட்கோயின் ஸ்போர்ட்ஸ் பெர்சன்' விருது பெற்றனர். தொடர்ந்து, தடகளம் மற்றும் குழுப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.
என்.பி.டி., கல்லுாரியை பொறுத்தமட்டில், மாணவர் ஜேசன்ஜனார்த்தனன், மாணவி காவியஸ்ரீ ஆகியோர் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
இதேபோல, ஐ.பி.எ.ஏ., கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லுாரிகள் இடையே நடந்த கேரம் போட்டியில், என்.பி.டி., கல்லுாரி முதலிடம் பெற்றனர். மேலும், பாட்மின்டன், சதுரங்கம், கைப்பந்து, த்ரோபால், கோ-கோ, கபடி, வளையப்பந்து போட்டிகளில் இரண்டாமிடம் வென்றனர்.
எம்.சி.இ.டி., மாணவர் சேவை மன்ற விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கமலாதித்தன் நன்றி கூறினார்.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி, எம்.சி.இ.டி., முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு டீன் ராமகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.