/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு விழா
/
பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு விழா
பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு விழா
பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : டிச 03, 2024 06:35 AM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள டாக்டர் பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். வருமானவரி துறையின் மூத்த கண்காணிப்பாளரும், கைப்பந்து விளையாட்டு வீரருமான குணா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், ட்ரூபர்ஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றது.
தொடர்ந்து, 2024ம் ஆண்டின் விளையாட்டு மற்றும் சிறந்த செயல் திறன் பரிசுகளை மாணவர்கள் பிரிவில் பிளஸ், 2 வகுப்பு மாணவர் கபிலன், பெண்கள் பிரிவில் பிரியதர்ஷினி ஆகியோர் பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், ரஞ்சனி பிரியா, மேலாளர் விஜய பாரதியார் செய்து இருந்தனர்.