/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் திடீர் ஆய்வு மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிகளில் திடீர் ஆய்வு

ADDED : ஜன 20, 2024 12:05 AM
வால்பாறை;வால்பாறை அடுத்துள்ள, சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் கேசவக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவர்களின் கல்வித்தரம், பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த அவர், பள்ளி வளாகத்தின் முன் 'யானை வழித்தடம் மீட்போம்' என்ற தலைப்பில் யானையின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர் துரைராஜை பாராட்டினார்.
ஆய்வின் போது, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.