/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க மஹோத்ஸவம் துவக்கம்
/
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க மஹோத்ஸவம் துவக்கம்
ADDED : டிச 25, 2024 08:27 PM

கோவை; ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின், 74வது பூஜா மஹோத்ஸவ விழா, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சூழ கோலாகலமாக நேற்று துவங்கியது.
ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுக்கிரஹத்துடன், பூஜா வைபவங்கள் ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு, பூஜா வைபவங்கள் நேற்று காலை 5:30 மணிக்கு, ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
ஐயப்ப பூஜா சங்க மண்டபத்தில், ஸ்ரீ ஐயப்ப சுவாமி பதினெட்டு படிகளை கொண்டு எழுந்தருளுவிக்கப்பட்டிருந்தார். பதினெட்டு படிகளுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஐயப்ப சுவாமிக்கு வலப்பக்கம் சுப்ரமணிய சுவாமியும், இடப்பக்கம் மஹா கணபதியும் எழுந்தருளுவிக்கப்பட்டிருந்தனர். மூன்று விக்ரஹங்களுக்கும், சிறப்பு அர்ச்சனை மற்றும் சங்கல்பம் செய்யப்பட்டது.
காலை 7:30 மணிக்கு ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், 8:30 மணிக்கு நவக்கிரஹோமம், பகல் 11:30 மணிக்கு பிரசாத வினியோகம் நடந்தது. 12:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதியோடு தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு, குமாரி காம்யா ஸ்ரீ பரஸ்ராமின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.
இன்று காலை 6:00 மணிக்கு கிராமபிரதட்சிணம், 6:30 மணிக்கு மஹாருத்ர சங்கல்பம், 7:30 மணிக்கு மஹன்யாச ஜபம், ஸ்ரீ ருத்ரஜபங்கள், ஸ்ரீ ருத்ராபிஷேகம், ஸ்ரீ ருத்ரஹோமம், காலை 11:00 மணிக்கு தம்பதி பூஜை, 11:30 மணிக்கு அன்னதானம், மதியம் 12:15 மணிக்கு வசோர்தாரை, மஹா தீபாராதனை, மாலை 6:30க்கு குமாரி பூஜா ஸ்ரீதர், குமாரி ரசிகா ரமேஷ் மற்றும் பாலக்காடு நுாறணியின் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க தலைவர் கணேசன், செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் மற்றும் அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

