/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ கிருஷ்ணா முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
/
ஸ்ரீ கிருஷ்ணா முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஆக 11, 2025 11:22 PM

கோவை; ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார்.
அவர் மாணவர்களிடையே பேசுகையில், '' கல்லுாரி காலத்தில் புதிய திறன்கள் மூலம் உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். படைப்பாற்றல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை அதிகாரி சுந்தரராமன், ஸ்கை டெக் முதன்மை அதிகாரி ஜனார்த் தனன் மற்றும் கல்லுாரி முதல்வர் பொற்குமரன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.