/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : ஜூன் 11, 2025 09:14 PM

சூலுார்; சூலுார் அடுத்த சித்தநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவது வழக்கம்.
நேற்று காலை பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாவிளக்கு எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
காலை, 9:00 மணிக்கு, திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு பக்தர்கள், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.